ஓசூரில் 12 நாட்கள் புத்தக திருவிழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
ஓசூரில் வரும் 14.7.2023 முதல் 25.07.2023 வரை 12 நாட்கள் புத்தக திருவிழா நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒசூர் ஓட்டல் ஹீல்ஸ் கூட்டரங்கில் வரும் 14.7.2023 முதல் 25.7.2023 வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. மேலும் 2 இலட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறவுள்ளன. நாள்தோறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பல்வேறு தலைப்புகளில் பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக நமது ஓசூரில் மிக பெரிய மக்கள் திருவிழாவாக புத்தக கண்காட்சி கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மாணவர்களை புத்தக வாசிப்பவர்களகவும், புத்தக வாசிப்பின் மூலம் தலை சிறந்தவர்களாக உருவாக்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். எனவே நமது மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த புத்தக திருவிழாவை பார்வையிட்டு அரியதகவல்களுடன் கூடிய புத்தங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) கோ.வேடியப்பன், ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா, ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சாயிணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் மோகன், தனி வட்டாட்சியர் ஜெய்சங்கர், ஓசூர் வட்டாட்சியர் சுப்பிரமணி, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் சேதுராமன், வணங்காமுடி, சத்தியமூர்த்தி, பாலகிருஷ்ணன், சந்திரசேகர் மற்றும் பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu