ஒரு குடும்பத்திற்கு அதிமுக தலை வணங்காது- முதல்வர்

ஒரு குடும்பத்திற்கு அதிமுக தலை வணங்காது- முதல்வர்
X

ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலை வணங்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கிருஷ்ணகிரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மீண்டும் அவர் புறப்பட்டு விட்டார். 4 ஆண்டு காலம் அலைந்து பார்த்தார். நான் சொல்வது யார் என்று உங்களுக்கு தெரியும். டிடிவி தினகரன். ஏதோ சந்தர்ப்பவசத்தினால் கட்சியில் இணைந்து கொண்டார். இப்போது சதி வேலை செய்து கொண்டிருக்கிறார்.ஒருபோதும் அவர்களை அதிமுகவில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது தொண்டர் ஆளுகின்ற கட்சி. உழைப்பால் உயர்ந்த கட்சி. ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலை வணங்காது. என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்