அரசு ஊழியர் மாநாட்டில் முதல்வர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.
அரசு ஊழியர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்:
1.போராட்டக்கால ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.
2.மாணவ விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்
3.கருணை அடிப்படை பணி நியமண விதிகள் தெளிவாக்கப்படும்.
4.அரசு ஊழியர் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நானும் ஒருவனாக இருப்பேன் நான் மக்கள் ஊழியன், நீங்கள் அரசுஊழியர், இது நமக்குள் உள்ள ஒற்றுமை
5.தமிழக நிதி நிலமையை அகல பாதாளத்தில் விட்டுச் சென்றுள்ளனர், இருந்த போதும் அறிவித்தவாறு அகவிலைப்படி வழங்கப்படும்
6.அரசு ஊழியர்தான் அரசாங்கம், அரசு ஊழியர் இல்லையெனில் அரசாங்கம் இல்லை
7.El.ஒப்படைப்பு வழங்கப்படும்
8.அரசு ஊழியர் இரகசிய குறிப்பேடு நீக்கப்படும்
9.ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தப்படும்
10. 2லட்சம் சத்துணவு ஊழியருக்கு கால முறை ஊதியம் வழங்கப்படும்
11..வேலைநிறுத்தப் போராட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை
12..இளநிலை உதவியாளர்கள் பவாணி சாகர் செல்வது தவிர்த்து மாவட்டத்தலைநகரிலேயே பயிற்சி நடைபெறும்
13.ஆசிரியர் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கிறேன் ( CPS உட்பட). கடந்தகால நிதிச்சீர்கேடுகளை சரிசெய்தபின் உங்களின் கோரிக்கைகளை நீங்கள் கேட்காமல் மாநாடு, போராட்டம் இல்லாமல் நிறைவேற்றுவோம்.
14.பல்வேறு தொழில் முனையங்கள் ஏற்படுத்தி தமிழக நிதி நிலைமை விரைவில் சீராக்கப்படும்
15..மக்களுக்குக் சேவை செய்யவே இந்த அரசு உள்ளது
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் பேசினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu