சேலம் கோட்டத்தில் மூடப்பட உள்ள வாங்கல் ரயில் நிலையம்

சேலம் கோட்டத்தில் மூடப்பட உள்ள வாங்கல் ரயில் நிலையம்
X

மூடப்பட உள்ள வாங்கல் ரயில் நிலையம்.

சேலம் கோட்டத்தில் வாங்கல் ரயில் நிலையம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம் கோட்டத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் மூடப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில், சேலம் நாமக்கல் கரூர் பிரிவில் உள்ள வாங்கல் ஹால்ட் நிலையம் (மோகனூர் – கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது) பயணிகள் போக்குவரத்திற்கான நிலையம் மூடப்படும்.

25.01.2024 முதல் பயணிகள் போக்குவரத்திற்கான நிலையம் மூடப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கரூர்- சேலம் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற 23 ஆண்டுகள் ஆயின. கரூர் -சேலம் அகலப் பாதை திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஒரே ஒரு நிலையம் வாங்கல் ரயில் நிலையம் ஆகும். பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே வாங்கல் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த வாங்கல் ரயில் நிலையம் மூடப்பட இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. போதுமான பயணிகள் வாங்கல் ரயில் நிலையத்தில் பயணம் செய்வதில்லை. இந்நிலையில் ஸ்டேஷனை நடத்தி ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை அடுத்து ரயில் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் சாலை மட்டத்திலிருந்து மிகவும் உயரமாக உள்ளது மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. போதுமான வசதிகளை செய்து ரயில்களை இயக்கினால் வருவாய் கிடைக்கும் அதற்காக ரயில் நிலையத்தை மூடுவது ஏற்புடையதல்ல என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த ரயில்நிலையத்தை மூடக்கூடாது சேவை மனப்பான்மை அடிப்படையில் தொடர்ந்து இயங்க செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து உள்ளனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!