கரூரில் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்ற கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி எக்ஸ்னோரா, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மற்றும் சுற்றுச் சூழல் குழுமம் சார்பில் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உப கோட்டம் கரூர் உதவி செயற்பொறியாளர் சாந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீர்வளத்துறை பொறியாளர் ராஜகோபால் பேசுகையில், நீர் ஆதாரங்களை பாதுகாத்திட மாணவ தன்னார்வலர்கள் முன் வர வேண்டும். நிலத்தடி நீரை நிலத்திலிருந்து எடுத்துக் கொண்டே இருக்கிறோம். நீர் நிலத்திற்கு வருவதற்கு எந்த ஒரு செயலையும் நாம் செய்வதில்லை. நிலத்தை மாசு படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்தால் நிலத்தடி நீர் உருவாகத் தொடங்கி விடும். இப்பணியை மாணவத் தன்னார்வலர்கள் முன்னின்று மேற்கொள்ள வேண்டும்.
நிலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மிகுதியான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும். நீரின் முக்கியத்துவம் உணர்ந்து அனைவரும் செயல்படக்கூடிய தருணம் இது. இந்த தருணத்தில் நாம் விழிப்புணர்வு அடைந்து செயல்பட்டு நீர் ஆதாரமான இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்று கூறினார்
தொடர்ந்து நீர்நிலைகள் பராமரிப்பில் இளையோரின் பங்கு என்ற தலைப்பில் நீர்வளத்துறை முன்னாள் பொறியாளர் சேகர் மற்றும் தமிழாய்வுத்துறை தலைவர் ஜெகதீசன், திருச்சி எக்ஸ்னோரா மண்டல தலைவர் விமல் ராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கருந்தரங்கு நிறைவு பெற்றதும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னதாக முடிவில் டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளர் வைரமூர்த்தி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu