கரூரில் மாநில அளவிலான குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

கரூரில் மாநில அளவிலான குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
X

கரூரில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயம் 

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, கரூரில் மாவட்ட திமுக சார்பில் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி, கரூரில் மாவட்ட திமுக சார்பில் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைவண்டிகள் பங்கேற்றன. போட்டியின் எல்லையாக கரூா் அரசு காலனி முதல் வாங்கல் வரை 5 கி.மீ. தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய குதிரை, சிறிய குதிரை மற்றும் புதிய குதிரை என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

பெரிய குதிரைவண்டி பிரிவில் கரூா் பாரத் பேருந்து நிறுவன வைரவேல் குதிரை வண்டி முதலிடம் பிடித்து ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையைத் தட்டிச்சென்றது. சேலம் சந்திரன் குதிரை வண்டிக்கு இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பையும், கரூா் நாவலடியான் குதிரை வண்டிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

சிறிய குதிரை பிரிவில் முதலிடம் பிடித்த கரூா் கேஎம்ஆா் வினோத் குதிரைக்கு முதல்பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த திருச்சி மீண்டும் தேவா் வம்சம் குதிரை வண்டிக்கு பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்த கோவை மகா கணபதி குதிரை வண்டிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

இதேபோல புதிய குதிரை பிரிவில் கோவை அசோக் குதிரை வண்டி முதலிடம் பிடித்து முதல் பரிசான ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையைத் தட்டிச்சென்றது. இரண்டாமிடம் பிடித்த கரூா் அலிம்கோ் குதிரை வண்டிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடித்த ஈரோடு பவானியைச் சோ்ந்த கேஆா்பி குதிரை வண்டிக்கு மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

பரிசுகள் மற்றும் கோப்பையை திமுக மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.கே.கருணாநிதி குதிரை வண்டி உரிமையாளா்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் திமுகவினா் திரளாகப் பங்கேற்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!