வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம்

வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம்
X

பைல் படம்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் கோரிக்கை மனு பதிவு தபால் அஞ்சலில் அனுப்பும் போராட்டம் கரூரில் நடைபெற்றது.

வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிடும் வகையில், தமிழகத்தில் மே 31ம் தேதிக்குள் தமிழக அரசு புதிய சட்டம் நிறைவேற்ற கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் கோரிக்கை மனு பதிவு தபால் அஞ்சலில் அனுப்பும் போராட்டம் கரூரில் நடைபெற்றது.

கரூர் கடை வீதியில் அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் தலைமையில் திரண்ட பாமக., வன்னியர் சங்கத்தினர் 500 கோரிக்கை மனுக்களை தபாலில் அனுப்பி வைத்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலையப்பசாமி, கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், வன்னியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் பசுபதி, புகலூர் நகரச் செயலாளர் அப்துல் ஹனி, ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ் சந்திரன், கார்முகிலன், சுரேஷ், முனியப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் வாங்கல் சதீஷ், வன்னியர் சங்கத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர் அரங்கம் சதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய தலைவர் சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story