கரூர் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கரூர் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
X

மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு உள்ளார்.

கரூர் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் தங்க வேலு பரிசு வழங்கினார்.

கரூர் மாநகராட்சி காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பாராட்டு சான்றிதழ்களை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார். அப்போது கலெக்டர் பேசுகையில் கூறியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு சிறப்பான திட்டம் இதுவும் ஆகும். ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அந்த திறமையை ஊக்கப்படுத்தியும், நமது கலை பண்பாடு மொழி ஆகியவற்றின் தொன்மைகள் குறித்து தெரிந்து கொள்வதற்கும், இது போன்ற கலைத் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நம்முடைய பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளை மறு உருவமாக கொண்டு வருவதற்கு மாணவர்களுக்கு இந்த கலைத் திருவிழா ஒரு சிறப்பான செயல். மாணவர்கள் ஒரு துறையில் மட்டும் வெற்றி காண்பதை விட பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

படிப்பை தவிர பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது ஓவியமாகவோ சிற்பமாகவோ நடனம் ஆகவோ அல்லது கராத்தே ஆகவோ ஏதாவது ஒன்றாக இருக்கலாம். மாணவர்களிடையே பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் இது போன்ற கலைத்திருவிழாக்களை போட்டி போடும் மனப்பான்மையில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.

மாவட்டம் முழுவதும் கலைத்திருவிழாவில் முதல் பரிசு பெற்ற 429 மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியாக இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கலைத் திருவிழாவில் வெற்றி பெற்று பரிசு பெற்றவர்கள் மட்டும் வெற்றியாளர்களாக அல்ல அதில் கலந்து கொண்ட அனைவருமே வெற்றியாளர் தான்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேலு பேசினார்.

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் காமாட்சி (இடைநிலை) மணிவண்ணன் தொடக்கக் கல்வி, செல்வமணி (மெட்ரிக் பள்ளிகள்) மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் சக்திவேல், சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு