கரூரில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாமை பார்வையிட செய்ய வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் .செந்தில்பாலாஜி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொழிலாளர் நலத்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கரூர் மாவட்ட மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.
முகாமில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்க உள்ளார்.
முகாமில் 220-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 26 ஆயிரம் பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர் என்று கூறினார்
மேலும் அவர் கூறுகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 2 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் இணைத்து உள்ளார்கள். இதற்கான முகாம்கள் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது.
மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை.
விவசாயிகளுக்கு விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு 9,048 கோடி மானியத்தை அரசு வழங்கியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 4 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
நிகழ்வின்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu