புகளூர் காகித ஆலை மேலாளர் தற்கொலை: காவல்துறை விசாரணை

புகளூர் காகித ஆலை மேலாளர் தற்கொலை: காவல்துறை விசாரணை
X

பைல் படம்

புகளூர் காகித ஆலை மேலாளர் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள மசக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சிவக்குமார் (வயது 47). இவர் புகளூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் விற்பனை பிரிவு முதுநிலை மேலாளராக பணியாற்றி பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி(42). இவர்களுக்கு கிருத்திக் (12) என்ற மகன் உள்ளார் .இவர் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிவக்குமார் டிஎன்பிஎல் காகித ஆலையில் பணியாற்றி வருவதன் காரணமாக காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் மசக்கவுண்டன் புதூரில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கேள்வியுற்று அங்கு வந்த அவரது உறவி னர்கள், சிவகுமாரை மீட்டு வேலாயுதம்பாளையம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து சிவகுமாரின் மனைவி ஜெயந்தி தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த அவர் கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்களின் நெஞ்சை கனக்க செய்தது.

பின்னர் இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.

அவர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,கணவன், மனைவிகிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக சிவக்குமார், கடந்த ஒரு வாரமாக காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டிற்கு செல்லாமல் தனது சொந்த ஊரான மசக்கவுண்டன் புதூரில் தங்கி இருந்து அங்கு சாப்பிட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் உளைச்சலுக்கு ஆளானதாக தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்து உள்ளது.

இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி