கரூர் பேருந்து நிலையத்தில் நிரம்பி வழியும் கூட்டம்: பொதுமக்கள் அவதி
கரூர் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
கரூர் பேருந்து நிலையத்தில் தொடர் 4 நாட்கள் விடுமுறையில் போதிய பஸ்கள் இயங்காததால் மணிக்கணக்கல் கைக்குழந்தைகளுடன் பெண்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி, கோவை, சேலம், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வோருக்கான கரூர் பேருந்து நிலையம் பிரதானமாக நிலையமாக இருந்து வருகிறது. மேலும் கரூர் தொழில் மிகுந்த நகரமாக இருந்து வருகிறது. இங்கு ஜவுளி, பஸ்பாடி, கொசுவலை உற்பத்தி, கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மிகவும் பரபரப்பாக இருக்கும் கரூர் பேருந்து நிலையம், வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலை மோதியது.
போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சனி, ஞாயிறு, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் 4 நாள்கள் தொடர் விடுமுறை தினங்களால், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த சூழலில் போதிய பேருந்துகளை இயக்காததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
வழக்கம்போல் வரும் பேருந்துகளும் மாற்று பாதையில் சிறப்பு பேருந்துகளாக அறிவிக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட பல பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்பகுதியில் வழக்கம் போல் வரும் பேருந்துகளும் குறைவாக காணப்படுகின்றது. இதனால், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பல மணி நேரம் காத்திருந்து பேருந்தில் ஏறி தங்களது சொந்த ஊருக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் சென்ற பேருந்துகள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல், திருச்சி, கோவை மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று பயணவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu