30 வருட கள்ளக்காதல், பேச மறுத்ததால் தீர்த்துக் கட்டிய 70 வயது பெரிசு, என்ன கொடுமை சார்?

30 வருட கள்ளக்காதல், பேச மறுத்ததால் தீர்த்துக் கட்டிய 70 வயது பெரிசு, என்ன கொடுமை சார்?
X

முப்பது வருட கள்ளக்காதலி பேச மறுத்ததால், கொலை செய்த 70 வயது முதியவர்.

30 வருட கள்ளக்காதலி பேச மறுத்ததால் அரிவாளால் வெட்டி தீர்த்து கட்டிய, 70 வயது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் சேவாப்பூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, இவரது மனைவி பழனியம்மாள் (55), விவசாய தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி (எ) மணி (70). பழனியம்மாளுக்கும், மணிக்கும் கடந்த 30 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக கள்ளக்காதலர்கள் இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையில் பேசிக் கொள்வது இல்லையாம். கள்ளக்காதலன் தாத்தா பலமுறை பேச முயன்றும் காதலி கண்டுக் கொள்ளவில்லையாம்.

இதனையடுத்து பழனியம்மாளிடம் பேசுவதற்காக அவரது வீட்டுக்கு, மணி இன்று அதிகாலை 4 மணியளவில் சென்றார். அப்போதும் மணியிடம் பழனியம்மாள் பேச மறுத்தார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஆளை ரெடி செய்து விட்டாயா என்று திட்டியவாறு மணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பழனியம்மாளை சரமாரியாக வெட்டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் இறந்தார். தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 30 வருட கள்ளக்காதல் கொலையில் முடிந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்