நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..

நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: கிரைம் செய்திகள்..
X

பைல் படம்.

Karur News Today - கரூரில் நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Karur News Today - கரூர் பசுபதிபாளையம் செல்வ நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவரது மகள் காயத்ரி (வயது 22). இவர் கரூரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பி. எஸ். சி. நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக காயத்ரி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் காயத்ரியின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதில் பலத்த தீக்காயங்களுடன் அலறி துடித்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோத மதுவிற்பனை: ஒருவர் கைது

கரூர் மாவட்டம், குளித்தலை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதை டிஐஜி தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுங்ககேட் கரூர் சாலையில் டாஸ்மாக் அருகே மது விற்ற மணத்தட்டை கடைவீதியை சேர்ந்த வைரப்பெருமாள் மகன் மாணிக்கம் (35) என்ற நபரை பிடித்த தனிப்படை போலீசார் குளித்தலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குளித்தலை போலீசார் விற்பனைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இரும்பு பொருட்கள் திருட்டு: மூவர் கைது

கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் அடுத்த அதியமான் கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). இவர் மசக்கவுண்டன் புதூர் பிரிவு சாலை அருகே இரும்பு கிரில் பட்டறை நடத்தி வருகிறார்.

இந்த கிரில் பட்டறை முன்பு 35 கிலோ எடை கொண்ட 2 இரும்பு பொருட்களை முருகேசன் வைத்திருந்தார். அதனை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இரும்பு முகம்புகளை திருடியது அண்ணாநகர் நகராட்சி காலனி பகுதியை சேர்ந்த பிரசாத் (22), காந்திநகர் 7வது தெருவை சேர்ந்த ரகுமான் (22), அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த சுகந்தன் (21) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 இரும்பு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!