கரூர் மாவட்ட செய்திகள்: மாயனூரில் பேரிடர் மீட்புப்படை ஆய்வு - பாஜக செயற்குழு கூட்டம்

கரூர் மாவட்ட செய்திகள்: மாயனூரில் பேரிடர் மீட்புப்படை ஆய்வு - பாஜக செயற்குழு கூட்டம்
X

மாயனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஆய்வு மேற்கொண்டனர் 

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்சிகள் பற்றிய செய்தி தொகுப்பு

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் நேற்று தேசிய பேரிடர் மீட்பு படை காவல் ஆய்வாளர் சுபோத் டாங்கே தலைமையில் மீட்பு படையினா் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காவிரி ஆற்றையொட்டி உள்ள பகுதியில் வெள்ளப்பெருக்கு காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி செய்ய வேண்டும்?, பாதுகாப்பு அம்சங்கள் எப்படி இருக்க வேண்டும்?, புதுமாதிரியான மீட்பு முறைகளை எவ்வாறு கையாலாம் என்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். மாயனூர் கட்டளை, மேலமாயனூர் வாய்க்கால் பகுதிகளிலும் ஆய்வு நடந்தது.

பாஜக மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம்

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அமைந்துள்ள கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம் பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தீனசேனன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி. வி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் புவனேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

பாரதிய ஜனதா கட்சி கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் நவீன் குமார், கரூர் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சரண்ராஜ், கோபிநாத், சக்திவேல் முருகன், ஆறுமுகம், இளைஞர் அணியின் மாவட்ட பொதுச் செயலாளர் மாவட்ட பொருளாளர் மோகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!