குழந்தை திருமணத்தை தடுக்க இளந்தளிர் இல்லம் திட்டம்
இளம்தளிர் இல்லம் திட்டத்தை தொடங கி வைத்து, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று மாணவி மற்றும் பெற்றோர் மரக்கன்று நடுவதை பார்வையிடுகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளந்தளிர் இல்லம் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கரூர் மாவட்டத்தில் நிமிர்ந்து நில், துணிந்து சொல் என்ற வாசகத்தோடு விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இளந்தளில் இல்லம் திட்டத்தில், 26 ஆயிரம் மாணவிகள் அவர்களது பெற்றோர்களும் விழிப்புணர்வு பெறக் கூடிய வகையில் ஒவ்வொரு மாணவிகளுக்கும் ஒரு மரக்கன்றுகளை கொடுத்தனர். அப்போது குழந்தை திருமணம் என்பது வரக்கூடிய காலங்களில் கரூர் மாவட்டத்தில் இல்லை என்ற நிலைய உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த இளந்தளிர் இல்லம் சிறப்பு வாய்ந்த ஒரு இயக்கமாக இன்று தொடங்கப்படுகின்றது என்றார். இதனைத் தொடர்ந்து குழந்தை திருமண எதிரான உறுதி மொழியினை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் பள்ளி மாணவிகள் இல்லங்களுக்கு நேரில் சென்று மாணவிகள், பெற்றோருடன் சேர்ந்து மரக்கன்று நடுவதை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மொஞ்சனூர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu