கள்ளக்காதலன் உடன் ஓடிய மனைவி : கணவன் போலீசில் புகார்

கள்ளக்காதலன் உடன் ஓடிய மனைவி : கணவன் போலீசில் புகார்
X

கரூரில் கள்ளக்காதலியுடன் மனைவி ஓட்டம்.( பைல் படம்)

கரூரில் கள்ளக்காதலன் உடன் ஓடிய மனைவியை கண்டுப்பிடித்து தருமாறு கணவன் போலீசில் புகார் செய்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிந்தாமணிபட்டி காவல் நிலைய சரகத்திணை சார்ந்த பாப்பணம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ஜேசிபி டிரைவரான கோவிந்தராஜ் (வயது 30), இவரது மனைவி பிரீத்தா (வயது 26), இத்தம்பதியினருக்கு 6 வயது மகன் மற்றும் 4 வயது மகள் மற்றும் 4 மாத கைக்குழந்தையுடன் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், இதே பகுதியைச் சார்ந்த மணிகண்டன் ( வயது 22 ), தனியார் பால் வாகன டிரைவர். மணிகண்டனுக்கும், கோவிந்தராஜ் மனைவி பிரீதா விற்கும் இடையே கள்ள காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் பிரீத்தா வை அழைத்துக்கொண்டு, கடந்த 15ஆம் தேதி ஊரை விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பிரீத்தாவின் கணவர் கோவிந்தராஜ், சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில், கடந்த 16 ஆம் தேதி புகார் செய்துள்ளார். இந்நிலையில் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இருவரது செல்போன் எண்களை கொண்டு டிரேஸ் செய்யும் போது, அவர்கள் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இருவரையும் மீட்டு சிந்தாமணிபட்டி காவல் நிலையத்திற்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் கொண்டு வந்துள்ளனர். மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்த, கோவிந்தராஜ், காவல் நிலையத்தில் உள்ள மனைவி பிரீத்தாவை சந்திக்க முற்பட்டபோது காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ராதேவி அனுமதிக்க வில்லை,

இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மேலும் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சித்ராதேவி கணவரை மிரட்டியதாக அந்த வீடியோவில் உள்ளது மேலும் இதனை தொடர்ந்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரித்தா குழந்தைகளுடன் கணவருடன் செல்ல சம்மந்தம் தெரிவித்தார்.

அவரை அழைத்துச் சென்ற கள்ள காதலன் மணிகண்டன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பிரித்தா குழந்தைகளுடன் குளித்தலையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிறகு அவரின் விருப்பத்திற்கு ஏற்ப கணவருடன் அனுப்பி வைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்