கரூரில் மனைவி தூக்கிட்டு தற்கொலை : போதையில் தூங்கிய கணவன்

கரூரில்  மனைவி தூக்கிட்டு தற்கொலை : போதையில் தூங்கிய கணவன்
X

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால்   மின் விசிறியில் தொங்கும் மனைவியின் சேலை 

கரூர் அருகே மாயனுரில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கணவன் போதையில் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே வீட்டுக்குள் மனைவி உயிரிழந்த நிலையில், கிடக்க அருகே போதையில் தூங்கிய கணவனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைத்து விசாரித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனியை சேர்ந்தவர் மாலதி. 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்த தனசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் உள்ளார். மாலதி மாயனூரில் தாய் தமிழரசி வீட்டில் மகன் ஆசித்துடன் வசித்து வந்தார். தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போதை ஒழிப்பு மையத்தில் பணியாற்றி வருகிறார்.

தனசேகரன் தனது மகனையும் மனைவியும் பார்க்க மாயனூருக்கு கடந்த சில தினங்களுக்கு வந்துள்ளார். நேற்று வீட்டில் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனசேகரன் அதிகமான போதையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வீட்டுக்குள் இருந்த சிறுவன் ஆசித் அழுகுரல் தொடர்ந்து கேட்கவே அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மாலதி இறந்து கிடந்துள்ளார். அருகில் போதையில் தனசேகரன் தூங்கிக் கொண்டிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மாயனூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, மாலதி உயிரிழந்து கிடந்த அறையில் மின்விசிறியில் மாலதியின் துப்பாட்டா மாட்டியிருந்தது. இதனால், மாலதி தூக்கு போட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டாலும், அவரது உடல் தரையில் கிடந்தது எப்படி என சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, போதையில், இருந்த தனசேகரனை எழுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மனைவி சடலத்துடன் போதையில் கணவர் போதையில் தூங்கியதைக் கண்டு மாயனூரில் போலீசார் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!