கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை, பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை, பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் முழுவதும் இன்று மாலை பரவலாக மழை பெய்தது, இதில் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் இன்று மாலை முதலே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கரூர் நகரம், தான்தோன்றிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம், வெங்கமேடு, அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.


இதன் காரணத்தால் கரூர் நகரின் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் பெய்த மழையால் வேலை முடித்து வீடு திரும்புவோர் பலரும் பெரிதும் அவதிப்பட்டனர். இருந்தபோதிலும் மழையின் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரூர் காவல் நிலைய பகுதியில் இருந்த வாதநாராயண மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து சாய்ந்தது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மரம் சாய்ந்ததால அதன் கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின் துண்டிப்பு குறித்து மின்வாரிய ஊழியர்கள் மழையையும் பொருட்படுத்தாது மின்கம்பங்கள் மீது ஏறி மின் கம்பிகளை சரி செய்தனர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கரூர் நகர பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story