மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 21,318 கன அடியாக அதிகரிப்பு

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 21,318 கன அடியாக அதிகரிப்பு
X

காவிரி மாயனூர் கதவணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரியில் மாயனூர் கதவணைக்கு விநாடிக்கு 21,318 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. வரும் நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில்,கரூர் மாவட்டத்தில் மாயனூரில் உள்ள காவிரி கதவணைக்கு வினாடிக்கு 21,318 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று 27,353 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

மாயனூர் கதவணையில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால்,புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் அப்படியே. 21,318 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுகிறது. அணையின் மொத்த நீர் மட்டம் 16.72 கன அடியாகவும், தற்போதைய நீர் மட்டம் 10.16 கன அடியாகவும் உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!