மாயனூர் கதவணை நீர் வரத்து 72,331 கன அடி

மாயனூர் கதவணை நீர் வரத்து 72,331 கன அடி
X

மாயனூர் கதவணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர்.

மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து 72,331 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்படுகிறது

கரூர் காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 72,331 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது, இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதன் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் வினாடிக்கு 72,331 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

நேற்று. 63,134 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 72,331 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

கதவணையில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படாததால், 72,331 கன அடி நீரும் காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படுகிறது.

அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 16.72 அடி. தற்போதைய நீர்மட்டம் 9.9 அடி.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....