கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் அவதி
X

கரூரில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், தடுப்பூசி போட வந்த பலர் அதிர்ச்சியுடன் திரும்பி சென்றனர்.

கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை போடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி போட சென்ற சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்று சொல்லி அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது கடந்த சில தினங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே கோவாக்சின் தடுப்பூசி தீர்ந்துவிட்டது. நேற்று மாலை வரையில் கோவிஷீல்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வந்த நிலையில் அந்த தடுப்பூசியும் தீர்ந்துவிட்டபடியால், இன்று காலையிலிருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியவில்லை.அதே போல இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட வந்தவர்களை செவ்வாய்க்கிழமை திரும்ப வரச் சொல்லி அனுப்பி உள்ளோம் என்றனர்.

இது குறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் என அறிவித்துவிட்டு, இன்று மருந்து தீர்ந்துவிட்டதாக கூறுகின்றனர். உடனடியாக தடுப்பூசிகளை வரவழைத்து பொதுமக்கக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றார்.

Tags

Next Story
ai solutions for small business