கரூரில் கள்ள நோட்டு: பொறி வைத்து பிடித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்

கரூரில் கள்ள நோட்டு: பொறி வைத்து பிடித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்
X
கரூரில் பெட்ரோல் பங்கில் தொடர்ந்து கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இருவரை பங்க் உரிமையாளர் பொறிவைத்துப் பிடித்தார்

கரூர் மாவட்டம் தென்னிலையைச் சேர்ந்தவர் பிரபு இவர் அந்தப் பகுதியிலேயே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் பங்கில் விற்பனையான தொகையை வங்கியில் செலுத்தியபோது, அதில் ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். அந்த நோட்டை பிரபுவிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர்.

அதேபோல் அடுத்த நாளும் வசூலான தொகையில் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டு இருந்தது. இதையடுத்து உஷாரான பிரபு மூன்றாம் நாள் பெட்ரோல் பங்குக்கு வரும் நபர்களை கண்காணிக்க ஆரம்பித்தார் அப்போது இரண்டு நபர்கள் பெட்ரோல் போட்டுக்கொண்டு 500 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்துள்ளனர் அதை நோட்டை, நோட்டு எண்ணும் இயந்திரத்தில் சோதித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது.

அந்த நோட்டின் வரிசை எண்ணும், ஏற்கனவே மர்ம நபர்களால் கொடுக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் வரிசை எண்களும் அடுத்தடுத்த எண்களாக இருந்தன. இதையடுத்து அந்த இரண்டு நபர்களையும் பிடித்து வைத்துக்கொண்டு தென்னிலை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

உடனடியாக அங்கு வந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் தென்னிலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் பாரில் வேலை பார்ப்பவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து பங்கு உரிமையாளர் பிரபு கள்ளநோட்டுகளை மாற்ற முயன்றது குறித்து உரிய புகார் ஒன்றை தென்னிலை காவல் நிலையத்தில் அளித்தார்.

ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக வழக்கு பதியாமல் காலம் தாழ்த்தி வருவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரபு கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!