மாயனூர் கதவணைக்கு இரு மடங்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாயனூர் கதவணைக்கு இரு மடங்கு நீர்வரத்து அதிகரிப்பு
X

மாயனூர் கதவணை.

காவிரி ஆற்றில் மாயனூரில் உள்ள கதவணைக்கு நேற்றைய நீர்வரத்திலிருந்து ஒரு மடங்கு அதிகரித்து 35,281 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை நின்றுவிட்டாலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதனால், காவிரியில் அதிக அளவு நீர் திறந்து விடப்படுகிறது. இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து 33 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் காவிரியாற்றின் கரூர் மாவட்டத்தில் மாயனூரில் உள்ள கதவணைக்கு வினாடிக்கு 35,281 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று 16,796 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர் வரத்து ஒரு மடங்கு அதிகரித்து விநாடிக்கு 35,281 கன அடியாக வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34,861 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மாயனூர் கதவணையில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்காலில் 150 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 250 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!