குலதெய்வ கோயில், நடுகல் வழிபாடு இடத்தை வழங்க 5 கிராம மக்கள் கோரிக்கை

5 ஊர் மக்களின் குல தெய்வம் உள்ள இடத்தை அரசு கையகப்படுத்தக்கூடாது என்று மனு கொடுக்க வந்தவர்கள்.
5 ஊர் மக்களின் குல தெய்வம் மற்றும் இடுகாடு உள்ள இடத்தை, 700 குடும்பங்கள் பயன்பெறும் இடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என கோரி 50 க்கும் அதிகமானவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்தில் உள்ள கோடங்கிபட்டி , மணக்காட்டுநாயக்கனூர், கம்பளிநாயக்கனூர், கூனமநாயக்கனூர் , காமாநாயக்கனூர் ஆகிய கிராமங்களில் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்த சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட திரண்டு இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது : கோடங்கிபட்டி , மணக்காட்டுநாயக்கனூர், கம்பளிநாயக்கனூர், கூனமநாயக்கனூர் , காமாநாயக்கனூர் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு மாவத்தூர் ஊராட்சியில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே தனித்தனியாக குலதெய்வ கோயில்களை கட்டி வழிபட்டு வருகிறோம்.
இங்கு இறந்தவர்கள் நினைவாக நடுகல் வைத்து வழிபாடு செய்து வருவது வழக்கமாக உள்ளது. .வருடத்தில் இருமுறை எங்கள் பாரம்பரியமான 14 மந்தையர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலை எருது சாமி மாடுகளுடன் சுமார் 1,00,000 க்கும் மேற்பட்டோர் குல தெய்வ கோயில் உள்ள இடத்தில் கூடி திருவிழா நடத்தி வருவதாகவும்
தற்சமயம் கால்நடை துறை மற்றும் வருவாய்த் துறையும் ( 08.07.2021 ) அன்று கடவூர் வட்டாட்சியர் தலைமையில் நில அளவையர் மேற்படி இடத்தில் அளவை செய்யும் பொழுது , எங்கள் ஐந்து ஊர் பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் , ஊர் முக்கியஸ்தர்கள் எதற்காக இந்த நிலத்தை அளவீடு செய்கிறீர்கள் என்று கேட்டோம் . அப்பொழுது வட்டாட்சியர் இந்த இடம் கால்நடை மேய்ச்சல் தரிசு நிலமாக உள்ளது. இந்த இடத்தை அளவீடு செய்து கால்நடை துறையிடம் ஒப்படைப்பதாக கூறினார்கள். இதை கேட்டவுடன் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குல தெய்வம் உள்ள கோயில், எங்கள் முன்னோர்களின் நடுகல் உள்ள இடத்தை எந்தவிதமான துறைக்கும் ஒப்படைக்காமல் சுடுகாட்டிற்காகவும் ,எங்கள் முன்னோர்களின் நினைவான நடுகல் வழிபாட்டிற்கும் , வழக்கம்போல் திருவிழாக்களை நடத்தவும் எங்கள் பாரம்பரியப் பண்பாடு கிராம நிகழ்ச்சிகள் நடைபெறவும் மேற்படி இடத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சியை கைவிடுமாறு ஐந்து ஊர் பொதுமக்களின் சார்பாக மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu