பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து

பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து
X

லாரி விபத்தில் சிக்கிய ஓட்டுரை மீட்கும் முயற்சி.

கரூர் அருகே இரண்டு லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்பு.

திண்டுக்கல் மாவட்டம் டி. கூடலூரைச் சேர்ந்தவர் சுப்புராமன் லாரி ஓட்டுநர். இவர் இன்று காலை கரூரிலிருந்து ஜல்லி லோடு ஏற்றிக்கொண்டு வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கரூர் அருகே திருச்சி சாலையில் உப்பிடமங்கலம் பிரிவில் சுப்புராமன் ஓட்டிச் சென்ற லாரி, முன்னால் பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராமல் மோதியது. இந்த விபத்தில், சுப்புராமன் ஓட்டிச் சென்ற லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. நொறுங்கிய லாரிக்குள் சுப்புராமன் சிக்கிக் கொண்டார்.

விபத்து குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசார் பொக்கலைன் உதவியுடன் லாரியின் சிதைந்த பாகங்களை அப்புறப்படுத்தி சுப்புராமனை மீட்டனர். இந்த விபத்தில் சுப்புராமன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து தொடர்பாக வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!