2026 தேர்தலில் பாஜக 150 இடங்களில் வெற்றி: மாநிலத் தலைவர் கூறியது நிஜமாகும்

2026  தேர்தலில் பாஜக 150 இடங்களில் வெற்றி:  மாநிலத் தலைவர் கூறியது நிஜமாகும்
X

மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி .

2026 தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதை நிஜமாக்குவோம் என பாஜக கூட்டத்தில் உறுதி

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாஜக 150 இடங்களில் வெற்றி பெறும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதை நிஜமாக்கப்பாடுபடுவோம் என்று கரூர் அருகே புலியூரில் நடந்த பாஜக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கரூர், புலியூர் அருகேயுள்ள வடக்குபாளையத்தில் எம்.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட தலைவர் சிவசாமி பேசுகையில், ஆளுநர் தமிழிசைசௌந்தர்ராஜன் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றார். அவரின் கூற்று உண்மையாகி உள்ளது. அதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் வருகின்ற 2026 -இல் நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றி பெரும் என்று கூறி வருகின்றார். அவரின் கூற்றை உண்மை ஆக்கும் வகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்‌ என்றார்.

கூட்டத்திற்கு. மாவட்ட பொதுச் செயலாளர்கள் நகுலன் மோகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட அமைப்பு செயலாளர் பாலன் மற்றும் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிர்வாகிகள் மதுக்குமார், முருகானந்தம், கோபிநாத், கவிதா, கிருஷ்ணமூர்த்தி, ராமநாதன், ஆர்..எஸ். செல்வராஜ், பிரபு, பரணிதரன், பாலுசாமி மற்றும் மாநில, நிர்வாகிகள், கரூர் மாவட்ட பாஜகவின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், மண்டல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . மாவட்ட துணைத்தலைவர் தமிழ்வாணன் வரவேற்றார். தாந்தோணி கிழக்கு ஒன்றிய தலைவர் பாலு நன்றி கூறினார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!