தலையெழுத்தை மாற்றும் தமிழக தேர்தல்: திருச்சி சிவா

தலையெழுத்தை மாற்றும் தமிழக தேர்தல்: திருச்சி சிவா
X
இன்னும் சில நாட்களில் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றக் கூடிய தேர்தல் என கரூர் தேர்தல் பரபரப்புரையில் திருச்சி சிவா பேச்சு.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட புலியூரில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பியுமான திருச்சி சிவா பேசுகையில்,

தேர்தல் திருவிழா என்று சொல்கிறார்கள் இது தேர்தல் திருவிழா அல்ல, அடுத்த 5 ஆண்டு காலம் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் கடந்த 10 ஆண்டுகளில் பட்ட கஷ்டங்கள் மாற திமுகவிற்கு வாக்களியுங்கள். நீங்கள் தான் எஜமானர்கள் நீங்கள் தான் நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும்.

நாடாளுமன்றத்தில் 98 சதவீதம் அரசுப் பணியில் தமிழர்கள் பணி அமர்த்த வேண்டும் என்று பேசியுள்ளேன். 5 ஆயிரம் கொடுக்க சொன்னது திமுக, ஆனால் கொடுக்கவில்லை, 4 ஆயிரம் ஸ்டாலின் முதல்வரானால் கட்டாயம் கொடுப்பார். கொரனோ காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

எல்லா நேரங்களிலும் உங்களுக்காக உழைக்கும் கட்சி திமுக. கொரனோ காலகட்டத்தில் வீடு தோடி பொருட்களை கொடுத்து மக்களை காப்பாற்றியது திமுக .நல்ல ஆட்சியை தேர்ந்தெடுத்தால் கவலைகளை அரசு ஏற்றுக் கொள்ளும், மாற்றினால் கஷ்டங்கள் நீங்களே பட வேண்டும். அனைவரும் இந்த தொகுதியில் இருந்து ஒரு பெண் பிரதிநியை தேர்ந்தெடுக்க வேண்டும். முதுகெழும்பு உள்ள முதல்வராக ஸ்டாலின் இருப்பார் என சிவா பேசினார்.


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது