புலியூரில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வேண்டுகோள் விடுத்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் இராணி மெய்யம்மை அரசு மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏழை, எளியோர் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை 29.09.2021 அன்று சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்கள்.
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" மூலம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என பேசினார். கரூர் மாவட்டத்தில் பொருத்தவரை இது இரண்டாவது வருமுன் காப்போம் முகாம் ஏற்கனவே வெள்ளியணை பகுதியில் 07.12.2021ஆம் தேதி நடைபெற்றது. இன்று புலியூர் பகுதியில் உள்ள இராணிமெய்யம்மை அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெற்றது. முகாமில் மகளிருக்கான பல்வேறு பரிசோதனைகள், பல், தோல், கண், இரத்த பரிசோதனை, கொரோனா பரிசோதனைகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu