/* */

கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
X

ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் வாக்குப் பதிவை பார்வையிடுகிறார் ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒரு ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி தலைவர் மற்றும் 12 ஊராட்சி உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. இவற்றுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இவற்றில், 5 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 10 உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கண்ணையன், அதிமுக சார்பில் முத்துக்குமார் உள்பட 16 பேர் போட்டியிடுகின்றனர் மொத்தம் உள்ள 10 ஊராட்சி பதவிகளுக்காக 47 பேர் போட்டியிடுகின்றனர். 42 ஆயிரத்து 605 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

இவர்களுக்காக 56 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 18 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெள்ளியணை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரிடம் வாக்குப்பதிவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

Updated On: 9 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி