கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்: முன்னாள் அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு எம் ஆர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு.

கரூர் மாவட்டத்தில், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒரு ஒன்றியக் குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி தலைவர் மற்றும் 12 ஊராட்சி உறுப்பினர் என 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி 8 வது வார்டில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் (எ) முத்துகுமார் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து, அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளியனை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளியணை தெற்கு காலனி, பஞ்சப்பட்டி காலனி, பஞ்சப்பட்டி, மாமரத்து பட்டி, லட்சுமிபுரம், தேவகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது, திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முடக்கும் நோக்கத்தில் செயல்படுவதாக கூறி அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!