அழுகிய முட்டை விவகாரம்: சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

அழுகிய முட்டை விவகாரம்: சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
X

பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதாக எழுந்த பள்ளியில் ஆய்வு செய்யும் ஆட்சியர் பிரபு சங்கர்

கரூரில் பள்ளி மாணவர்களுக்கு வழங் அழுகிய முட்டை வைத்திருந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளியில் ஆட்சியர் ஆய்வு.

கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க அழுகிய முட்டை வைத்திருந்த விவகாரத்தில் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் தொண்டமாங்கிணம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க இருந்த சத்துணவு முட்டைகள் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இது குறித்து பெற்றோர்கள் அளித்தனர்.இது குறித்து சமூக வலைதளங்களிலும் அழுகிய முட்டை காட்சிகள் வைரலாகி வந்தன.

இதையடுத்த்து, மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர். இன்று பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளை முறையாக பராமரிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அழுகிய முட்டையை பள்ளிகளுக்கு விநியோகம் செய்த, விநியோகஸ்தரை கருப்பு பட்டியலில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!