தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி: கலெக்டரிடம் கோரிக்கை
மீண்டும் பணி வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தூய்மைப்பணியாளர்கள்.
தூய்மை பாரத திட்டத்தில் பணியாற்றி, தற்போது ஒப்பந்தம் மாறியதால், பணி வாய்ப்பு வழங்க மறுக்கப்பட்ட 17 பேர் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள பழை ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் தூய்மை்பாரத திட்ட ஊக்குநர்களாக பணியாற்றி தற்போது பணி வாய்ப்பு வழங்கப்பட்ட 10 -க்கும். மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியதாவது; கரூர் மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரதம் திட்டத்தில் ஒப்பந்ததாரர் நிறுவனம் மூலம் , 16.10.2017 முதல் 22 பேர் ஊக்குநர்களாக பணியமர்த்தப்பட்டு தற்போது வரை எவ்வித . குற்றச்சாட்டுகளுமின்றி சிறப்பாக பணியாற்றி வந்தோம்.
இந்நிலையில், 01.08.2021 முதல் வேறு ஒரு நிறுவனம் ஒப்பந்ததாரராக வந்தவுடன், 22 பேர்களில் 17 பேர்களுக்கு பணி வழங்க மறுத்து விட்டனர் . கடந்த 2021 ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் மாதங்களுக்கான ஊதியத்தையும் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர். நாங்கள் செய்து வந்த பணி தற்காலிகப் பணியல்ல . அப்பணி தொடர்ந்து செயல்படுத்தப் படக்கூடிய பணியாகும். அவ்வாறு செயல்படுத்தப்படும் பணியில் எங்களையே தொடர்ந்து பணியாற்றச் செய்வதால் , பேரூராட்சி நிர்வாகங்களுக்கோ அல்லது ஒப்பந்ததாரருக்கோ எவ்வித இழப்பும் ஏற்படப்போவதில்லை. எங்களுக்கு பதிலாக வேறு ஊழியர்களை பயன்படுத்துவது , எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவும் , இயற்கை நியதிக்கும் , சட்டங்களுக்கும் முரணானதாகவும் உள்ளது . எனவே, மாவட்ட நிர்வாகம், விசாரணை நடத்தி, எங்களுக்கு மீண்டும் பணி வழங்கி, வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 மாத ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu