புலியூரில் தலைவர் பதவிக்கு திமுக தேர்வு : இ.கம்யூனிஸ்ட் கொந்தளிப்பு

புலியூரில் தலைவர் பதவிக்கு திமுக தேர்வு : இ.கம்யூனிஸ்ட்  கொந்தளிப்பு
X

கோப்பு படம் 

புலியூரில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவின் புவனேஸ்வரி தேர்வானதால், : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று (மார்ச் 4ம் தேதி) தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் பதவி வேட்பாளர் க.கலாராணி வந்திருந்த நிலையில், திமுகவினர் அவரது பெயரை முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக திமுகவினர் முன்மொழிந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரான க.கலாராணி உள்ளிட்ட வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் புவனேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், ஏமாற்றமடைந்த கலாராணி அவர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். டிஎஸ்பி தேவராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். மேலும், தேர்தல் முறையாக நடைபெறவில்லை. நல்ல முடிவு வழங்கப்படவேண்டும் என கலாராணி தெரிவித்தார்.

Tags

Next Story
ai and iot applications in agriculture