உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
பைல் படம்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தலைவர் பதவிக்கு திவ்யா போட்டியின்றி பேரூராட்சி தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் துணைத்தலைவராக கட்சியின் தலைமை அறிவித்த பாக்கியலெட்சுமி என்னும் நபரை தேர்ந்தெடுக்க, போதுமான கவுன்சிலர்கள் யாரும், வராத காரணத்தினாலும், நேற்று மாலை பாக்கியலெட்சுமி உள்ளிட்ட 3 வார்டு கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்ததால் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் பானுஜெயராணி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த பதவிக்கு இரண்டு நபர்கள் போட்டியிடுவதாலும், இரண்டு நபர்களுமே திமுக கட்சியை சார்ந்தவர்கள் என்பதினாலும், துணை தலைவர் பதவிக்கு 8 கவுன்சிலர்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை என்பதினால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், உப்பிடமங்கலம் பேரூராட்சி 08.06.1969லிருந்து முதல்நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வரும், இந்த பேரூராட்சி முப்பது குக்கிராமங்களை கொண்ட விவசாய பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu