குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டத்தில் நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் முகாம் கஸ்தூரிபாய் தாய்சேய் நலவிடுதி மையத்தில் இன்று தொடங்கப்பட்டது. குழந்தைகளை, நியூமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து பாதுகாப்பு இந்த தடுப்பூசி அளிக்க்கப்படுகிறது. இத்தடுப்பூசி குழந்தைகளுக்கு 6 வாரம், 14 வாரம் மற்றும் 9 மாதத்தில் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இந்த தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், மாவட்டத்தில் இன்று முதல் பிறந்து 5 வாரம் ஆன மொத்தம் 289 குழந்தைகளுக்கு முதல் தவணை நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இவ்வருட இறுதிக்குள் கரூர் மாவட்டத்தில் 7,844 குழந்தைகள் இந்த தடுப்பூசி மூலம் பயன் பெறுவார்கள் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu