இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற வெடிபொருள் வெடித்து ஒருவர் பலி

இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற வெடிபொருள் வெடித்து ஒருவர் பலி
X

வெடிபொருள் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு.

தரகம்பட்டி அருகே குளக்காரன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற வெடி பொருள் வெடித்து சிதறியது.

கரூர் மாவட்டம் பாலவிடுதி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே உள்ள குளக்காரன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென வெடித்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வைரம்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் கிணற்றில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் வெடி பொருட்கள் அல்லது திருவிழாக்களில் பயன்படுத்தும் நாட்டு வெடிகளை எடுத்துச் சென்றபோது அது வெடித்து சிதறியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே குமார் உடல் சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து பாலவிடுதி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!