கரூரில் நாவல் பழம் சீசன்; கிலோ ரூ.120க்கு விற்பனை

கரூரில் நாவல் பழம் சீசன்; கிலோ ரூ.120க்கு விற்பனை
X

விற்பனைக்கு வந்துள்ள நாவல் பழம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரம் நாவல் பழம் இந்த ஆண்டு அதிக அளவில் விளைந்து விற்பனைக்காக வந்துள்ளது.

கரூர் மாவட்டம் காவிரியாற்றை ஒட்டியுள்ள விளை நிலங்களில், மாயனூரில் தொடங்கி பேட்டவாய்த்தலை வரை அதிக அளவில் நாவல் மரங்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஆனி மாதம் தொடங்கி ஆவணி வரை ருசி மிக்க நாவல் பழம் விளையும். இந்த நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக இருப்பதால் அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

நாவல் பழம் தற்போது அதிக விளைச்சல் கண்டு விற்பனைக்கா மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் மழை பெய்ததால் நாவல் மரத்தில் அதிக பூக்கள் வைத்து பழங்கள் அதிக அளவு விளைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சீசன் தொடங்கியதால், மரத்திலிருந்து விழும் பழங்கள் கீழே விழுந்து சேதம் ஆகாமல் இருக்கவும், கீழே விழும் பழங்களை எடுக்கும் வகையிலும் மரங்களை சுற்றி கொசு வலைகளை கட்டி விவசாயிகள் ஆயத்தமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நாவல்பழம் ரூ .70 க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். வேலுார் , நாமக்கல் , கரூர் , திருச்சி போன்ற வெளி மாவட் டங்களிலிருந்தும், உள்ளூர் பகுதியிலிருந்தும் வியாபாரிகள் வந்து பழங்களை வாங்கி செல்கின்றனர். சில்லரை வியாபாரத்தில் நாவல் பழம் கரூரில் ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!