கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை:  அமைச்சர் செந்தில்பாலாஜி
X

கரூரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது இல்லை. இருந்தாலும் வாய்ப்பு உள்ள தனியார் ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்க எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்

கரூரில், கொரோனா சிறப்பு நிதி உதவி முதல் தவணையாக ரூ 2 ஆயிரம் வழங்கும் பணியை துவக்கி வைத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேட்டி:

கரூர் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தற்போது இல்லை. இருப்பினும், கூடுதலாக ஆக்சிசன் உற்பத்தியை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு காகித ஆலை வளாகத்தில் 250 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் உபகரணங்கள் வெளிநாட்டில் இருந்து வருவதால் அதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல கரூர் மாவட்டத்தில் வாய்ப்பு உள்ள தனியார் ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் அழைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, கொரோனா காலம் என்பதால் மக்களை பாதுகாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்பிறகு மாதாந்திர மின் கட்டண நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்வார்.

Tags

Next Story
ai products for business