/* */

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி  ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
X

தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் 20 உறுப்பினர்களைக் கொண்டது. கடந்த 2021ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நடைபெற்ற தேர்தலில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் 8 உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் 12 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிக உறுப்பினர்கள் இருந்தபோதிலும் அ.தி.மு.க.வில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. காரணம் தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். அ.தி.மு.க.வில் தாழ்த்தப்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர் கூட இல்லை. தி.மு.க.வில் 5 தாழ்த்தப்பட்ட பெண் உறுப்பினர்கள் இருந்தனர்.

இதனால் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரமதி என்பவரை அ.தி.மு.கவினர் தங்கள் கட்சிக்கு இழுத்து அவரை தலைவராக்கினர். தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்ததும், அ.தி.மு.க.வில் இருந்து 6 உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் திமுகவின் பலம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து தலைவர் மீது கடந்த கூட்டத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர்.

குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த குழு கூட்டத்தில், சந்திரமதி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 16 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். தலைவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனால் அ.தி.மு.க. தலைவர் பதவியிலிருந்து சந்திரமதி நீக்கப்படுவார்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டம் நடைபெற்றதால், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஏற்கனவே சந்திரமதி என்ற பெண்மணி பதவிக்காக, தி.மு.க. விலிருந்து அ.தி.மு.க. விற்கு கட்சி மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 1 March 2022 3:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?