2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை: போலீசார் விசாரணை

2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

தரகம்பட்டி அருகே செம்பியநத்தத்தில் கணவர் வீட்டில் இல்லாதபோது, தாய் மற்றும் 2 குழந்தைகள் கிணற்றில் சடலமாக மிதந்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பியநத்தம் கிராமம், பூசாரி பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (35). கரூர் டெக்ஸ் டைலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சரண்யா (30) என்ற மனைவியும், கனிஷ்கா வயது 6, புதிஷா வயது 3 என்ற 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சக்திவேல் நாச்சிமுத்துபாளையம் என்ற கிராமத்திற்கு உறவினரின் திருமணத்திற்காக சென்றுள்ளதாக கூறுகின்றனர். சக்திவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டு அருகே 50 அடி ஆழ கிணற்றில் சரண்யா, இரு குழந்தைகளுடன் குதித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்,

இவருடன் மாமனார் மற்றும் மாமியாரும் வசிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யா மற்றும் கனிஷ்காவை சடலமாக மீட்டனர். தண்ணீர் அதிகம் உள்ளதால் 3 வயது குழந்தையை இரு மோட்டார்கள் வைத்து தண்ணீரை இறைத்து சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனையடுத்து பாலவிடுதி போலீசார் ௩ பேரின் உடலை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலவிடுதி போலீசார் கணவர் இல்லாத நேரத்தில் தாய் மற்றும் இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து இறந்ததாக கூறும் தகவல்களை கொண்டும், பெண்ணின் பெற்றோர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரை தொடர்ந்தும் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையில் போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!