பழைய ஜெயங்கொண்டபுரத்தில் துணை மின் நிலையம் அமைவிடம் எம்எல்ஏ ஆய்வு
பழைய ஜெயங்கொண்புரத்தில் துணை மின்நிலையம் அமைய உள்ள இடத்தை எம்எல்ஏ சிவகாமசுந்தரி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணராயபுரம் தொகுதியிலுள்ள கோவக்குளம், பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் வருவதால் விவசாயிகள் முறையாக ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்ய முடியவில்லை என கூறி வந்தனர். இதனால், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி பகுதியில் ஒரு துணை மின் நிலையம் அமைத்து பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி சுற்றியுள்ள பகுதிகளுக்கு முறையான அழுத்தத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணன்பட்டி என்ற இடத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள லட்சுமணம்பட்டி என்ற இடத்தில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ள 26 ஏக்கர் இடத்தை கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி இன்று மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அப்பொழுது அந்த 26 ஏக்கர் நிலத்தில் துணை மின் நிலையம் அமைப்பது குறித்து அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார் தொடர்ந்து அந்த பகுதியில் துணைமின் நிலையம் அமைப்பதன் மூலம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளுக்கு சரியான அழுத்தத்தில் மின்சாரம் வழங்க முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu