கரூரில் தாெழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூரில் தாெழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

கரூரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொ.மு.ச.,வினர்.

கரூரில் தொ.மு.ச சார்பில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் அருகில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் அண்ணாவேலு தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்று 1.75 லட்சம் கோடிக்கு பற்றாக்குறையை சமாளிக்க முயற்சியைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். அரசு பணியில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி வேலை நாட்களை எண்ணிக்கையில் உயர்த்தி, குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்.

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டணம் இன்றி செலுத்த வேண்டும் சுகாதார முன்கள பணியாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....