கரூர்: அதிகாரிகளை அவதூறாக பேசிய தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம்

கரூர்: அதிகாரிகளை அவதூறாக பேசிய  தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம்
X

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவர் மயில்வாகனன்

கரூரில், உயரதிகாரிகள் குறித்து ஜாதி ரீதியாக அவமரியாதையாக பேசிய புகாரில், தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலையத்தில், எஸ்பி தனிப்பிரிவு காவலராக மயில்வாகனன் பணிபுரிந்து வருகிறார். அண்மையில், மாவத்தூர் பகுதியில் இரவு பகலென மணல் திருட்டு நடப்பதாக , சின்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், எஸ்பி தனிப்பிரிவு காவலரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அப்போது அந்த காவலர், "பாலவிடுதி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உன் ஜாதிக்காரன். அவர்களிடம் பேச மாட்டியா அவர்கள் அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு என்ன.... (கொச்சை வார்த்தைகளால்) செய்கிறார்கள்" என்று திட்டியுள்ளார். மேலதிகாரிகளை தரக்குறைவாக பேசிய அந்த ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காவல்துறையின் கண்ணியத்தை மீறி நடந்து கொண்ட தனிப்பிரிவு காவலர் மயில்வாகனனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். எனினும், தலைமை காவலர் பேசியதைக் கண்டித்து உயரதிகாரிகளின் சமூகத்தைச் சேர்ந்த சங்கத்தினர், டிஐஜியிடம் புகார் கொடுத்து விட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!