கரூரில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வாங்க ரூ 10 ஆயிரம் நிதி வழங்கிய திருநங்கை

கரூரில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வாங்க ரூ 10 ஆயிரம்  நிதி வழங்கிய  திருநங்கை
X
கரூரில் திருநங்கை ஓவியா ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வாங்க ரூ 10 ஆயிரம் நிதி வழங்கினார்
கரூரில் எம்.பி, ஜோதி மணியிடம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வாங்கி கொடுக்க ரூ 10 ஆயிரத்தை திருநங்கை ஓவியா வழங்கினார்.

கரூரைச் சேர்ந்த திருநங்கை ஓவியா ரூபாய் 10 ஆயிரத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆக்சிஜன் செறிவூட்டி வாங்க அளித்துள்ளார். கரூர் எம்பி ஜோதிமணியிடம் திருநங்கை ஓவியா அளித்த 10 ஆயிரம் மற்றும் எம்பி ஜோதிமணி திரட்டிய தொகை மூலம் 10 ஆக்சிசன் செறிவூட்டிகள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்

இதுகுறித்து திருநங்கை ஓவியா கூறுகையில், திருநங்கைகளின் வாழ்வாதாரம் என்பது தினசரி போராட்டம்தான். நான் டெய்லரிங் தொழில் பார்த்து வருகிறேன் அதில் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு ராஜீவ்காந்தி நினைவு நாளின்போது முதியோர்களுக்கு உணவு அளிப்பது வழக்கம்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்படுவதை கண்டது மனம் கஷ்டப்பட்டது இதையடுத்து எனது சொந்த சேமிப்பிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் ஆக்சிஜன் செறிவூட்டி வாங்க எம்பி ஜோதிமணியிடம் வழங்கினேன் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்