கரூர் மாவட்டத்தை திமுகவின் கோட்டை என நிரூபிப்போம்: அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டத்தை திமுகவின் கோட்டை என நிரூபிப்போம்: அமைச்சர் செந்தில்பாலாஜி
X

திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழகத்துக்கு முதலமைச்சர் வழங்கிய திட்டங்களை வீடு தோறும் திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

கடந்த 4 மாதத்தில் தமிழகத்துக்கு வழங்கிய திட்டங்களை வீடு தோறும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் கொண்டு சென்று கரூர் மாவட்டம் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி திமுக கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்தலில் ஈடுபடுவது தொடர்பாக, திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் உப்பிடமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழக முதல்வராக ஸ்டாலின் மே 7 -ஆம் தேதி பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 மாதத்தில் தமிழகத்துக்கு வழங்கிய திட்டங்களை வீடு தோறும் திண்ணைப் பிரசசாரம் மூலம் கொண்டு செல்ல வேண்டும். ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 5 திட்டங்களுக்கு கையெழுத்து இட்டவர் முதல்வர் ஸ்டாலின். தேர்தல் வாக்குறுதியோடு சேர்த்து கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இலவச மளிகை பொருள்களை வழங்கியவர் தமிழக முதல்வர்.

உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டம் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் இதுவரை 10 கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கியுள்ளார். எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் அளவுக்கு வெற்றி இருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில்,காவிரியில் இரண்டு தடுப்பணைகள், வேளாண் கல்லூரி, சுற்றுவட்ட சாலை, ஏரி, குளங்களை தூர் வாரி தண்ணீர் கொண்டு வரும் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜிபேசினார்.

கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என திமுக கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!