கொரோனா ஊரடங்கால் காவிரி வெள்ளாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகள் நிறுத்தம்

கொரோனா ஊரடங்கால் காவிரி வெள்ளாறு இணைப்புக்  கால்வாய் திட்டப் பணிகள் நிறுத்தம்
X

கரூரில் கொரோனா ஊரடங்கால் காவிரி வெள்ளாறு இணைப்புக் கால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டது.

கரூரில் கொரோனா ஊரடங்கால் காவிரி வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டது.

காவிரி ஆற்றில் மழை வெள்ள காலங்களில் வரும் அதிகப்படியான காவிரி ஆற்று நீர் கடலில் கலந்து வீணாவதை தடுத்து வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கவும் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரஇல் உள்ள காவிரி கதவணையிலிருந்து முதல் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை வாய்க்கால் வெட்ட முடிவு செய்யப்பட்டது

அதற்காக கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் திருக்காம்புலியூர் கிராமத்திலிருந்து மகாதானபுரம், வடக்கு தெற்கு சிந்தலவாடி, எல்லப்பாளையம் ஆகிய கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கின.

மாயனூர் கதவணை தென்கரை வாய்க்காலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் வாய்க்கால் வெட்டும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது குறிப்பாக 100 மீட்டர் அகலத்தில் வாய்க்கால் வெட்டப்பட்டு வந்த்து. இந்நிநிலையில், கடந்த சில நாட்களாக வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 122 கோடி ரூபாய் செலவில் வாய்க்கால் வெட்டும் பணி துவங்கியது அந்த பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் முக்கிய பணிகள் செய்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது இதனால் வாய்க்கால் வெட்டும் பணி ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊருக்கு சென்றுவிட்டனர்.

இதனால் வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது ஊரடங்கு வாபஸ் பெறும் போதுமீண்டும் பணி தூங்கும் என கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future