கடவூர் வடக்குமலையில் அதிசய சுனை: வற்றாமல் நீர்வரும் அற்புதம்

கடவூர் வடக்குமலையில் அதிசய சுனை: வற்றாமல் நீர்வரும் அற்புதம்
X

வற்றாத சுனையில் கொட்டும் நீர்.  

வடக்குமலையில் வற்றாமல் செல்லும் ஊற்றுநீர் சுனை பகுதியினை சுற்றுலா தளமாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த கடவூர் பகுதியை சுற்றி மலைப்பகுதிகள் மட்டும் தான் இருக்கும். அந்தபுறம் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர், இந்தப்புறம் திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மீதம் இருப்பது கரூர் மாவட்டம் கடவூர் ஆகும். இந்நிலையில், கடவூர் வடக்குமலை பகுதியில் புகழ்பெற்ற முனியப்பன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. ஆன்மீக தலமான இந்த தலத்தில், இதனையொட்டியுள்ள மலையில், ஊற்றுநீர் போல எப்போதும் வந்து கொண்டிருக்கும் ஒரு சுனை அதிலிருந்து தண்ணீர் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். அப்புகழ்பெற்ற அந்த சுனையானதும், அந்த சுனையிலிருந்து வடியும் நீர் காட்சி அப்படியே பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கும்.

இந்நிலையில், அந்த நீரும் அவ்வளவு சுவையாக இருக்கும். இந்நிலையில், அந்த ஊர் மக்கள் மட்டுமில்லாது மற்ற மாவட்டங்களை சார்ந்தவர்களும் இந்த சுனைக்கு வந்து செல்வார். இன்று முழு ஊரடங்கு என்பதினால் யாரும் இல்லாத அந்த சுனை வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன. மேலும், இயற்கை எழில் கொஞ்சும் இந்த கடவூர் மலைப்பகுதியில் பல்வேறு வெளவால்களும், தேவாங்குகளும்., ஓணான்களும், காட்டு வகை விலங்குகளும் இருப்பதால் சுற்றுலாத்தளமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், கரூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சங்கமிக்கும் இந்த கடவூர் மலைப்பகுதியினை அரசு சுற்றுலாத்தளமாக்க முயற்சி எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!