இஸ்ரேல் தாக்குதல் தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்பாட்டம்

இஸ்ரேல் தாக்குதல் தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்பாட்டம்
X
கரூரில், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலைக் கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இணையவழி கண்டன ஆர்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு நின்று பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

ரமலான் மாதத்தில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல். கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலை கண்டிக்கும் வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!