"இளைஞர்களுக்கு 2 வாய்ப்புகள்" ஐஜி., பாலகிருஷ்ணன் பேச்சு

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
முயற்சியால் பலன் கிடைக்காவிடிலும், அனுபவம் மூலம் வெற்றி பாதை உருவாக்கலாம் என இளைஞர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மத்திய மண்டல காவல் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் பேசினார்.
கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் மணவாசி கிராமத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், அரசு வேலை வாய்ப்பு பெற நிறைய திட்டங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இளைஞர்களுக்கும் முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. நன்றாக இருக்கவும், கெட்டுப்போகவும் என உள்ள இரண்டு வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். முயற்சி செய்ய வேண்டும். முயற்சியால் பலன் கிடைக்காவிடிலும் அதனால் ஒரு அனுபவமாக மாறும். அந்த அனுபவம் மூலம் வெற்றி பாதையை உருவாக்கலாம் என பேசினார்.
இவரைத்தொடர்ந்து கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி , நாமக்கல் மாவட்ட திறன்மேம்பாட்டு, துணை இயக்குநர் பார்த்திபன். கரூர் அரசு தொழில்நுட்ப பயிலக முதல்வர் மாரீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், இளைஞர்கள் அரசு வேலை பெறுவதற்காக அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் இணையவழி குற்றங்களான ஆன்லைன் மோசடி, கடன் மோசடி, சமூக வளைதள மோசடி மற்றும் பெண்களுக்கான எச்சரிக்கை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu