/* */

24 மணி நேரத்தில் குடியிருக்க வீடு : மகிழ்ச்சியில் திளைத்த மாற்றுத் திறனாளி சிறுமி

மின்துறை அமைச்சரிடம் மனு அளித்த மாற்றுத் திறனாளி சிறுமி குடும்பத்துக்கு 24 மணி நேரத்தில் அரசு வீடு வழங்கப்பட்டது

HIGHLIGHTS

24 மணி நேரத்தில் குடியிருக்க வீடு :  மகிழ்ச்சியில் திளைத்த  மாற்றுத் திறனாளி சிறுமி
X

அமைச்சர்  உத்தரவால் மாற்றுத்திறனாளி சிறுமி குடும்பத்துக்கு அரசு குடியிருப்பில் இலவச வீட்டுக்கான உத்தரவை வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

மின்துறை அமைச்சரிடம் மனு அளித்த மாற்றுத் திறனாளி சிறுமி குடும்பத்துக்கு 24 மணி நேரத்தில் அரசு வீடு வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தனது மாற்றுத்திறனாளி மகள் உள்பட 3 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். மாற்றுத்திறனாளி மகளுக்கு அரசு வழங்கி வரும் உதவித்தொகை மற்றும் கூலி வேலை செய்து வரும் சொற்ப வருமானத்தில் செல்வி தனது முதல் மகள் நிஷாவை கல்லூரியிலும், 2 வது மகள் நிவேதாவை மகளை பன்னிரண்டாம் வகுப்பிலும் மாற்றுத்திறனாளியான மற்றொரு மகளான ரோகினியை ஒன்பதாம் வகுப்பிலும் படிக்க வைத்து வருகிறார்.

குறைந்த ஊதியத்தில் 3 மகள்களை படிக்க வைத்து வாடகை வீட்டில் குடியிருக்கும் தனக்கு இலவச அரசு வீடு வழங்க வேண்டும் என நேற்று நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு அளித்தார். மனுவைஙபெற றுக. கொண்ட அமைச்சர் உடனடியாக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று, மூன்று பெண் குழந்தைகள் நலன் கருதி உடனடியாக செல்விக்கு, கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை ஒதுக்கி அதற்கான ஆணையை மாற்றுத் திறனாளி குடும்பத்தினரிடம் அளித்தார். மனு அளித்த 24 மணி நேரத்திலேயே அரசு வீடு ஒதுக்கப்பட்டதால், இந்த குடும்பம் பெரிதும் நிம்மதி அடைந்து உள்ளது.

Updated On: 18 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு